மரணம் என்பது கொடியதோ, பயமுறுத்தலோ அல்ல அது ஒரு உண்மை, உடல் நலிவுற்று உயிர்வாழத் தகுதியற்றது என்ற நிலைவரும் போது மரணம் இயற்கையாக நிகழ்கிறது. முதுமையில் 'மரணம் என்பது நம்புவர்களுக்கு அடுத்த பிறவியின் திறவுகோல், சொர்கத்தை நம்புவர்களுக்கு உலக வாழ்கையிலிருந்து விடுதலை. நாத்திகர்களுக்கு இயற்கை நிகழ்வு.
வயதான பிறகு நிகழும் மரணத்திற்கு தமிழில் அழகான சொல்பதம் உண்டு 'இயற்கை எய்துதல்' , மரணம் என்பது இயற்கை அதை அடைவதே 'இயற்கை எய்துதல்'. வாழ்கையின் குறிகோள் இது என்று வகுத்துவிட்டு அதன் படி வாழ்ந்து முடிக்கும் போது மரணம் அழகான முடிவையே தருகிறது. அவர்களுக்கு மரண பயம் என்பதே இருக்காது.
மற்ற வகை மரணங்கள் ? அவைகள் தான் மரணத்தைப் பற்றி அச்சத்தை நமக்கு எப்போதும் கொடுக்கின்றன. அவை பெரும் சோகங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இயற்கை மரணம் என்பது ஆன்ம விடுதலை மற்றும் பயன்படுத்திய உடல் நிரந்தர ஓய்வு பெற்றுக் கொள்வதறகான நிகழ்வு ! இயற்கை மரணத்தை வரவேற்கலாம், கொண்டாலாம் !
வலைத்தளங்களில் நுழைந்து வந்த போது இதனை படித்தேன். (மேலும் அறிய http://govikannan.blogspot.com வலைத்தளத்திற்கு செல்லவும்.)
நன்றி கோவி.கண்ணன்..